பொதுஜன பெரமுனவுக்குள் வெடித்தது மோதல்..! அமெரிக்கா செல்லத் தயாராகும் பசில்
Basil Rajapaksa
Sri Lanka Politician
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Kiruththikan
பசில் ராஜபக்ச
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் அது தாமதமாகலாம் எனவும் கூறப்படுகிறது, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே இது தாமதமானதாக கூறப்படுகின்றது.
பின்வரிசை உறுப்பினர்கள் பலத்த அழுத்தம்
இராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பின்வரிசை உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு பலத்த அழுத்தம் பிரயோகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி