அர்ச்சுனா எம்.பி முன்வைத்த ஆமைக்கறி விமர்சனம்...! சீமான் கொடுத்த பதிலடி
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தமிழகத்திற்குச் சென்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக இந்திய ஊடகங்களிடம் தொடர்ச்சியாகத் தனது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
இதில் சீமான் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது மற்றும் அங்கு அவருக்கு ஆமைக்கறி பரிமாறப்பட்டது குறித்து அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
சீமான் ஈழத்திற்கு வந்து தலைவர் பிரபாகரனைச் சந்தித்திருக்க வாய்ப்பில்லை அவ்வாறு சந்தித்திருந்தாலும் அங்கு ஆமைக்கறி சாப்பிட்டதாகச் சொல்வது முற்றிலும் கற்பனையான பொய்யான கதைகள் என்று அர்ச்சுனா குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், குறித்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும் தமிழர்களிடையேயும் அதிகமாகப் பகிரப்பட்டதுடன் தொடர்ச்சியான விமர்சனங்களும் எழுந்தன.
இத்தகைய சூழலில், அர்ச்சுனாவின் இவ்வாறான கருத்துக்களைச் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நேற்று (18-05-2026) முன்னெடுக்கப்பட்டது.
இதில் கருத்து தெரிவித்த சீமான், இலங்கையிலிருந்து வந்திருக்கும் அவருக்கு தமிழீழம் எங்குள்ளது ? தெற்கு உள்ளதா வடக்கு உள்ளதா என்றே தெரியாது எனவும் என் தலைவன் நின்ற திசை அவருக்கு தெரியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொஞ்ச நாள் விட்டு என்னை சமாளிக்க கஷ்டப்படுவீர்கள் எனவும் ஏனென்றால் நான் அடங்க முடியாத வெறியில் இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைகளைக் கழுவக்கூடத் தண்ணீரில்லை! மக்களின் குருதியோடு அறுவை சிகிச்சை செய்த கொடூரம்: முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |