நாளைய தினம் நாடு திரும்புகிறார் பசில் - களை கட்டப்போகும் கொழும்பு அரசியல்
Basil Rajapaksa
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
தனிப்பட்ட விஜயமாக அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச நாளையதினம் (20) நாடு திரும்பவுள்ளதாக ராஜபக்ச குடும்பத்தின் உறவினர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கை
பசில் ராஜபக்ச அமெரிக்காவில் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தார், அவர் அமெரிக்காவில் இருந்தபோது இருபத்தியோராம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, பசில் ராஜபக்ச இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளில் அவர் தீவிரமாகப் பங்களிக்கப் போவதாகத் தெரியவருகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி