தமிழர்கள், கூட்டமைப்பிற்கு நாமல் ராஜபக்ச விடுத்த எச்சரிக்கை
இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்களும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும் கவனத்தில் கொள்ள வேண்டுமென நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.
வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை இந்த அரசியல்வாதிகள் மாற்றிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து வரும் கட்சிகளையும் அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் நம்பலாம்.
ஆனால் தேர்தலுக்கு சற்று முன்னர் தமது கொள்கைகளை மாற்றிக்கொள்பவர்கள் தேர்தல் காலத்தில் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அதே அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் இரட்டை வேடத்திற்கு
இதுவும் இந்தக் கட்சிகளின் இரட்டை வேடத்திற்குச் சான்றாகும்.' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் ஸ்மாட் வகுப்பறையை திறந்து வைத்து உரையாற்றிய சஜித் பிரேமதாச தனது அரசாங்கத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |