பொருளாதார நெருக்கடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
பொதுநலன் கருதி தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் உச்ச நீதிமன்றில் இன்று இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், உப தலைவர் அனுர மெத்தேகொட, செயலாளர் ரஜீவ் அமரசூரிய, பொருளாளர் ரஜிந்த் பெரேரா மற்றும் உதவி செயலாளர் பசிந்து சில்வா ஆகியோரால் இந்த விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பதிலளிப்பவர்கள் அரசின் நடவடிக்கை மற்றும் செயலற்ற தன்மையால் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனுவில் சட்டமா அதிபர், அமைச்சரவை, மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளர், பல அமைச்சுக்களின் செயலாளர்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

