மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு
batticaloa
bomb
By Vanan
மட்டக்களப்பு சத்திரகொண்டான் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்யும்போது குறித்த மோட்டார் குண்டினை கண்டுள்ளார்.
இதையடுத்து மட்டக்களப்பு திராய்மடு இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து - குறித்த இடத்துக்குச் சென்ற இராணுவத்தினர் குண்டை மீட்டு மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த குண்டு தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்க்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி