மீண்டும் ஆரம்பமான மட்டக்களப்பு - கொழும்பு கடுகதி தொடருந்து சேவை!
நாட்டில் பேரழிவுகளை ஏற்படுத்திய டித்வா புயல் காரணமாக கடந்த 45 நாட்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலத்தேசி கடுகதி தொடருந்து சேவை மட்டக்களப்பில் இருந்து நேரடியாக கொழும்பு நோக்கி இன்று (11.01.2026) நண்பகல் சேவையை ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு போக்குவரத்து அமைச்சருக்கு விடுத்த வேண்டுகோளின் பெயரில் இந்த தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடுகதி சேவை
அதன்படி, வாரஇறுதியில் பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையானது கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான கடுகதி சேவையை முன்னெடுத்திருந்தது.

மட்டக்களப்பில் இருந்து நண்பகல் 11.50 க்கு ஆரம்பமான கொழும்புக்கான இந்த கடுகதி சேவை இரவு 8 மணிக்கு கொழும்பை சென்றடையும்.
எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் மாணவர்களின் நலன் கருதி இந்த சேவையானது மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |


