கிழக்கு பல்கலையில் ரவுடித்தனமாக காவல்துறையினரின் அராஜகம்: எழுந்துள்ள கடும் கண்டனம்
வெசாக் தினத்தில் வீதிகளில் வழங்கப்படும் பௌத்த விருந்தோம்பலை ஆதரிப்பவர்கள் ஏன் தமிழ் மக்களின் நினைவேந்தலை புறக்கணிக்கின்றார்கள் என்று மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் (Gandiya Jagadas) கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த விடயத்தை கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலில், காவல்துறையினரை போல அல்லாது ரவுடி கும்பலை போல கீழ்தரமாக காவல்துறையினர் செயற்பட்டுள்ளனர்.
கஞ்சிப்பானையை காலால் தட்டி வீழ்த்தியும் மற்றும் அடுப்பினுள்ளே நீரூற்றியும் மிகவும் சிறுமை தனமாக காவல்துறை என்று சொல்லப்படுகின்ற சிறிலங்கா அரசின் ஏவல் துறை செயற்பட்டுள்ளனர்.
ஏன் இவர்கள் இதனை செய்கின்றார்கள் ? நடத்தப்பட்ட இனப்படுகொலையில் தாங்களும் ஒரு பங்குதாரிகள் அத்தோடு இனப்படுகொலையில் தாங்களும் காட்டிக்கொடுப்பை செய்தவர்கள் ஆகவே இந்த இனப்படுகொலை நினைவு கூற கூடாது என்பதற்காக காவல்துறையினரை ஏவிவிடுகின்றார்களா ?” என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதை காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |