கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு)

Batticaloa Jaffna
By Pavan Nov 06, 2023 09:26 AM GMT
Report

புதிய இணைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை சிங்கள மக்கள் அபகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களை மேலதிக நீதவான் அன்வர் சதாத் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

எனினும், குறித்த நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வதிவிடத்தைக் கொண்ட ஆள் சரீரப்பிணையில் அவர்களை எடுப்பதற்கு தேசிய அடையாள அட்டையை கிராமசேவகர் உறுதிப்படுத்திய ஆவணங்களை நீதிமன்றில் நேற்றைய தினம் ஒப்படைக்க தாமதமான நிலையில் அவர்களை சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளித்ததையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறித்த மாணவர்கள் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை ஆள்பிணையில் எடுப்பவர்கள் ஆவணங்களுடன் சிறைச்சாலைக்கு சென்று வழங்கியதன் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

இரண்டாம் இணைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சந்திவெளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 2 கிழக்கு பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட 6 பேரை மட்டக்களப்பு சந்திவெளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் வைத்ததே கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.  

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

முதலாம் இணைப்பு 

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டக் களத்தில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், எமது நிலங்களை ஆக்கிரமிக்காதே என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறல்

தமிழர்களின் பூர்விக இடங்களான மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி குடியிருப்புகளை அமைத்து வருகின்றனர்.

அதேவேளை குறித்த பகுதியில் மேச்சலில் ஈடுபடும் தமிழ் பண்ணையாளர்களுடைய கால்நடைகள் மீது துப்பாக்கிசூடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

இவ்வாறான சூழலில் பெரும்பான்மையாளர்களின் அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கு நிரந்தர தீர்வு கோரியும் தமிழ் கட்சியினரும் தமிழ் அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள் அங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026