மட்டக்களப்பு மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்
புதிய இணைப்பு
மட்டக்களப்பு முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் உறவுகளின் கண்ணீருடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
2ஆம் லெப்ரினன்ட் தங்கநிலா என்ற மாவீரரின் தாயார் கிருஷ்ணபிள்ளை புண்ணியவதி பொதுச்சுடர் ஏற்றினார் தொடர்ந்து இரண்டாயித்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவீர்ரகளின் பெற்றோர் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் ஏற்பாடுகள் பூர்த்தி
மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.
இந்நிலையில இவ்வருடம் பாதுகாப்பு படையினரினதோ புலனாய்வாளர்களினதோ எதுவித தடைகளும், தொந்தரவுகளும், இல்லை எனினும் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை என்னிடம் வந்த காவல்துறையினர் வத்தமானி அறிவித்தல் ஒன்றை எடுத்துவந்து மாவீரர் தினம் அனுஷ்டிப்பது தொடர்பில் எடுத்துக் கூறினார்கள்.
வர்த்தமானி அறிவித்தலை நான் ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை, வேண்டுமெனில் நீதிமன்ற உத்தரைவைக் கொண்டு வரவும் என நான் காவல்துறையினருக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையில் அவர்கள் திரும்பிச் சென்று விட்டார்கள்.
மீண்டும் என்னிடம் வரவில்லை. தற்போதைய காலநிலை காரணமாக மாவடிமுன்மாரிக்கு வரும் அனைத்து பிரதான வீதிகளும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதனால் நகர் புறங்களிலுள்ள மக்கள் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவு பீடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தற்போது மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் நின்று கொண்டிருக்கின்ற மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.