மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது
மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதியானது மறு அறிவித்தல் வரும் வரை முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (29) பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் காலை 10 மணியளவில் திறக்கப்பட்டதனால், குறித்த வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த வீதியினூடாக பயணிக்கும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதனால் அவர்களுக்கான மாற்று வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விசேட தொடரூந்து சேவை
அதன்படி வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்புக்கு செல்லும் பயணிகளுக்காக விசேட தொடரூந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக கதுருவெல தொடருந்து நிலையத்தில் இருந்து மானம்பிட்டி நோக்கி விசேட புகையிரத சேவை காலை 10.30 மணி முதல் இயக்கப்படவுள்ளதாக கதுருவெல தொடருந்து நிலைய அதிபர் தெரிவித்தார்.
மாற்று வீதி
மேலும் வாகனங்களில் மட்டக்களப்பு நோக்கி பயணிப்பவர்களுக்காக கிரிதலே, எலஹெர, பகமூன மற்றும் தெஹி அட்டகண்டிய வீதிகள் ஊடாக மாற்று வீதியாக பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்த மழைவீழிச்சியின் விளைவாக நீர்மட்டம் அதிகரித்து குளங்களின் வான்கதவுகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வெள்ள அனர்த்தம் காரணமாகவும் ஏராளாமான மக்கள் பாதிப்புக்குள்ளானமை குறிபிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |