டொனால்ட் ட்ரம்பிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய பிபிசி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் பிபிசி ஊடகம் மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப்பின் உரையை தவறான முறையில் திருத்தி வெளியிட்டதற்காக இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலுக்கு சில நாட்களுக்கு இடையில் டொனால்ட் ட்ரம்ப் - ஒரு இரண்டாவது வாய்ப்பு என்ற தலைப்பில் பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
தலைநகரில் வன்முறை
அதில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் திகதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய ஒரு மணி நேரத்துக்கும் மேலான உரையில் ஆங்காங்கே எடிட் செய்து தொடர்ச்சியாக பேசுவது போன்று காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, அமெரிக்க தலைநகரில் வன்முறையை தூண்டும்விதமாக டொனால்ட் ட்ரம்ப் பேசியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தால் டொனால்ட் டர்ம்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்தோடு, அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் உண்மையானவை அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
குழு நிர்ணயம்
இதனையடுத்து டொனால்ட் ட்ரம்ப் தரப்பில் பிபிசிக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதத்தில், பிபிசி தரப்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் மற்றும் தனக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பிபிசி தரப்பில் குழு நிர்ணயிக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், டொனால்ட் ட்ரம்ப் வன்முறையை தூண்டியது போன்ற பிம்பத்தை ஆவணப்படம் உருவாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனத்துக்கு எதிர்ப்பு
இதையடுத்து, பிபிசிக்கு நிறுவனத்துக்கு எதிர்ப்பு வலுக்க அவரிடம் பிபிசி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இதற்று முன்பே, பிபிசியின் தலைமை இயக்குநர் டிம் டேவி மற்றும் செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் இருவரும் பதவி விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இந்த ஆவணப்படமானது பிபிசிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிட்டதாகவும் மற்றும் இதனால் தனக்கு பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் டிம் டேவி கூறியதோடு பதவி விலகுவது முழுக்க முழுக்க தனது சொந்த முடிவு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து, பிபிசியின் தலைவர் சமீர் ஷா, மன்னிப்புக் கோரி வெள்ளை மாளிகைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், தங்களது ஆவணப்படத்தில் ஒரு உரையில் இருந்து எடுக்கப்பட்ட வெவ்வேறு பகுதிகளானது தொடர்ச்சியாக இருப்பது போன்ற தோற்றத்தை தற்செயலாக உருவாக்கி இருப்பதாகவும் மற்றும் இதனால் டொனால்ட் ட்ரம்ப் மக்களை வன்முறைக்கு அழைத்தார் என்பது போன்ற கருத்து பரவி இருப்பதை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |