2025 ஐபிஎல் போட்டிகள் எப்போது! பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவல்
2025 ஆண்டு கிரிக்கெட் போட்டிக்கான திகதியை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் ஐ.பி.எல். போட்டியின் அடுத்த 3 சீசன்களுக்கான திகதிகளை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, 2025 ஆம் ஆண்டு மார்ச் 14-ந் திகதி ஆரம்பமாகி மே 25-ந் திகதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
2025 ஐபிஎல் போட்டி
2026-ம் ஆண்டு சீசன் மார்ச் 15-ந் திகதி முதல் மே 31-ந் திகதி வரையிலும், 2027-ம் ஆண்டு சீசன் மார்ச் 14-ந் திகதி முதல் மே 30-ந் திகதி வரையிலும் நடை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 சீசன்களைப் போலவே 2025-ம் ஆண்டு சீசனிலும் 74 போட்டிகள் இருக்கும். போட்டிக்கான திகதி குறித்து இன்று காலை அணி உரிமையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
போட்டிக்கான இடம், யார்-யார் எந்த திகதியில் மோதுவது உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஐபிஎல் மெகா ஏலம்
ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்துக்கான இறுதி பட்டியலில் 574 பேர் இடம் பெற்றனர். இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது.
இந்த நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஏல பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.அவரது அடிப்படை விலை குறித்து தெரிவிக்கப்படவில்லை.
நவம்பர் 24 மற்றும் 25 திகதிகளில் 2025 ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலம் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |