சமைக்கும் போது கவனமாக இருங்கள்! மக்களை எச்சரிக்கும் பேராசிரியர்
பாதுகாப்பற்ற எரிவாயு கொள்கலன்களை திரும்ப பெறுவதற்கு இதுவரையில் எரிவாயு நிறுவனங்கள் நடவடிக்ககைளை எடுக்கவில்லை என ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜயதிலக்க (Jayathilaka) தெரிவித்துள்ளார்.
மூன்று முதல் நான்கு லட்சத்திற்கும் இடையிலான பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்னும் வீடுகளில் இருப்பதாக எரிவாயு வெடிப்பு சம்பந்தமாக ஆராய நியமிக்கப்பட்ட அரசதலைவர் விசாரணைக்குழுவின் உறுப்பினர் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
எரிவாயுவின் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்தாலும் மர்கெப்டன் அளவினை சரியாக பேணி இருந்தால், நடந்த விபத்துக்களில் 50 வீதமான விபத்துக்களை தவிர்த்திருக்க முடியும்.
எரிவாயு விபத்துக்கள் தொடர்பான ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அரசதலைவர் விசாரணைக்குழு வழங்கிய அறிக்கையை அரசதலைவர் செயலணிக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என்ற போதிலும் இதுவரை அவர்கள் அதனை ஆய்வு செய்யவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.