பனிக்காலத்தில் பெண்களின் சருமங்களில் ஏற்படும் மாற்றம்! இதனை மட்டும் செய்துவந்தால் போதும் - நல்ல பலனைப் பெறலாம்

people Women Beauty Tips Face Pack Face Mask Winter Body Weight Skin Care Helath
By Chanakyan Dec 23, 2021 08:27 AM GMT
Report

குளிர்காலத்தில் பெரும்பாலான பெண்கள் சருமம் சார்ந்த பிரச்சினையினால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக  சருமங்களில் ஏற்படும் வறட்சியே. அதிலும் பனிகாலங்களில் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடுகின்றது.

பனிகாலத்தில் சருமமானது இருமடங்கு வறட்சி அடைகிறது. எனவே தான் குளிர்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும் கிறீம் வகையினை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதிலும் பலர் இராசாய பதார்த்தம் இல்லாத பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க விரும்புவார்கள்.

ஏனெனில் இராசாய பதார்த்தம் நிறைந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பை கொடுத்து வந்தால், சரும செல்கள் சேதமடைந்து விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற வைத்துவிடும் என்பதால் தான்.

ஆகவே நீங்கள் உங்கள் சரும வறட்சியைத் தடுக்க ஒரு நல்ல இயற்கையான பராமரிப்பினை தேடுகிறீர்கள் என்றால் இந்த முறைகளைப் பயன்டுத்துங்கள் .

தேன் மற்றும் முட்டை மஞ்சள் கரு

ஒரு பௌலில் ஒரு முட்டையின் மஞ்சள் கரு, 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் சருமம் அதிகம் வறட்சி அடையும் கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 

முட்டை மஞ்சள் கரு, தேன் மற்றும் தயிர்

எண்ணெய் பசை சருமத்தினர் மற்றும் முகப்பரு அதிகம் வருபவர்கள், ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் தேன், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து, அத்துடன் சிறித முல்தானி மெட்டி பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வறட்சியான சருமத்தில் தடவி 20 நிமிம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். 

பப்பாளி

நன்கு கனிந்த பப்பாளி பழத்தை அரைத்து அதிகம் வறட்டு போகும் சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பப்பாளியில் கிளின்சிங் பண்புகள் உள்ளதால், இதை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குதோடு, சருமம் வறட்சியின்றி பொலிவோடு மினுக்கும். 

கரட்

கரட்டை துருவி, அதை சருமம் அதிகம் வறண்டு போகும் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், அதில் உள்ள விட்டமின் ஏ, குளிர்கால சரும பிரச்சினைகளைப் போக்கும். 

அவகேடோ

நன்கு கனிந்த அவகேடோ பழத்தின் கூழ் பகுதியை ஒரு பிளெண்டரில் போட்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கை, கால் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, சருமம் அதிகம் வறண்டு போகும் பகுதியில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைப் போக்கலாம். 

ஒரேஞ் ஜூஸ் மற்றும் தேன்

ஒரு டீஸ்பூன் ஒரேஞ் ஜூஸில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வந்தால், சரும வறட்சி நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு மின்னும்.

கோதுமை தவிடு

ஒரு பௌலில் 3 டீஸ்பூன் கோதுமை தவிடை எடுத்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் பாதாம் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025