பளபளப்பான சருமம் வேண்டுமா... இந்த பொடி மட்டும் இருந்தால் போதும் உடனடி பலன்
நம்மில் அதிகமானோருக்கு சருமம் பற்றிய கவலை இருக்கும் அனால் அதனை எவ்வாறு பராமரிப்பது என்பது தெரியாது
எமது சருமம் அழகாக ஜொலிக்க மட்டுமல்ல, ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டவும் பொலிவுடன் இருப்பது அவசியம்.
ஆனால் சூரிய ஒளி, புகை, மாறி வரும் உணவு பழக்க வழக்கம் போன்றவை சருமத்தை கடுமையாக பாதிக்கிறது.
இதனால் பெரும்பாலோனோர் தேவையற்ற கிரீம்களையும் செயற்கை இரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர்.
இதனை தவிர்த்து இயற்கை பொருட்களை வைத்து கூட இதனை சரி செய்ய முடியும்.
அதற்கு ஒரு குளியல் பொடி மிகவும் உதவுகின்றது. தற்போது இதனை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- ரோஜா பூ - 1 கப்
- ஆவாரம் பூ - 1 கப்
- பச்சை பயிறு - அரை கப்
- கஸ்தூரி மஞ்சள் - அரை கப்
- பூலான் கிழங்கு பொடி - 2 டீஸ்பூன்
செய்முறை
மிக்ஸி ஜாரில் ஆவாரம் பூ, பச்சை பயிறு, ரோஜா பூ, சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் பொடி பூலான் கிழங்கு பொடி சேர்த்து அரைத்துகொள்ளவும்.
இரண்டு ஸ்பூன் இந்த பொடியை கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன், ரோஸ் வாட்டர், அல்லது பால், தயிர் எதனுடன் வேண்டும் என்றாலும் சேர்த்துகொண்டு கலக்கி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் உடல் முழுவதும் தடவிக்கொண்டு, அரை மணிநேரம் கழித்து குளித்துவிடலாம்.
ஒரு வாரத்திற்குள் இதன் சிறப்பை நீஙகள் காணலாம். இதை அனைவரும் உபயோகப்படுத்தலாம்.
மூன்று மாதம் வரை இந்த தங்க குளியல் பொடியை பயன்படுத்திக்கொள்ளலாம்..


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 8 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்