அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக மாறி வரும் ஈரான்...!
ஹோர்முஸ் நீரிணையின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் மூலம் அமெரிக்காவை விட ஈரான் தற்போதைக்கு வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர் வொல்ஃப்காங் புஸ்ஸாய் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தங்களுக்குத்தான் தற்போது சாதகமான சூழல் இருப்பதாக ஈரான் கருதுகிறது.
தொழில்நுட்ப நிலை
இராணுவ ரீதியாகப் பார்த்தால் தற்போதைய நிலையில் அவர்கள் சிறந்த தொழில்நுட்ப நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்காவிடம் பல வழிகள் இருப்பதால் அதுவே வலுவான மூலோபாய நிலையில் இருக்கும்.

மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு சர்வதேச அளவில் செல்வாக்குமிக்க நாடுகள் தலையிட வேண்டியது அவசியம்.
இது நிச்சயமாக மிகவும் கடினமான ஒரு காரியம்.
ஈரானை நல்வழிப்படுத்த வெளியில் இருந்து ஒரு பரந்த அளவிலான அணுகுமுறை தேவைப்படுகிறது.
இதில் அரபு வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் குறிப்பாக ஈரானின் மிகப்பெரிய பொருளாதார வாடிக்கையாளர்களாக இருக்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தலையிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |