யாழில் முதியவர் ஒருவரிடம் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!
வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரது பணமானது இருவரால் அடித்துப் பறிக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை காவல்நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த முதியவர் நேற்றையதினம் சங்கரத்தையில் இருந்து நவாலி செல்லும் வீதியால் வியாபாரத்துக்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வழிமறித்து இடம் கேட்பது போல் பாசாங்கு செய்துள்ளனர்.
பின்னர் அவர்மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவர் வியாபாரத்துக்காக வைத்திருந்த ஒருதொகை பணத்தினை பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
விசாரணை
இந்த நிலையில், குறித்த சம்பவம் அங்கிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகி இருக்ககூடும் என அந்த முதியவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வட்டுக்கோட்டை காவல்நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக வட்டுக்கோட்டை காவல்நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |