இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு கோரி பலாலியில் வெடித்த போராட்டம்
Sri Lanka Army
Sri Lanka Police
Jaffna
Protest
By Theepan
யாழ்ப்பாணம் - பலாலியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் இன்று (12) நான்காவது தடவையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாங்கள் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
காவல்துறையினர் தடுத்தனர்
இந்தநிலையில் கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் முயற்சித்த போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து மக்கள் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்