முகத்தில் கரும்புள்ளியா... இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன்
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அழகு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகின்றது.
அதுவும் குறிப்பாக முகத்தின் அழகுக்கு தான் அதிக முக்கியத்துவம் காட்டுவார்கள்.
பலருக்கு முகத்தில் கரும்புள்ளி மற்றும் முகப்பரு என பலவும் ஏற்படும். அது போலவே முகத்தில் குழியும் வரும்.
இதுவும் சிலருக்கு தொந்தரவாகவுள்ளது, முகத்தில் குழிகள் அதிகம் உள்ளவர்களுக்கு, முகத்தில் எண்ணெய் வருவதோடு அழுக்குகளும் படியும்.
அதற்காக கவலைப்படாமல் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு இதை எப்படி நீக்கலாம் என்று தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை - 02 தே.கரண்டி
- வேப்பிலை - ஒரு கைப்பிடி
- தக்காளி - 01
- வெண்களிமண் - 02 தே.கரண்டி
செய்முறை
முதலில் கற்றாழை, வேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்த அரைத்து, வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் வெண்களிமண் சேர்த்து சேர்த்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்டை 15 நிமிடம் வரை முகத்தில் பூசி வைக்க வேண்டும். காய்ந்தவுடன் தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு வாரத்தில் இரண்டு முறையாவது செய்துக் கொள்ள வேண்டும்.
