முகத்தில் கரும்புள்ளியா... இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன்
கோடைக்காலத்தில் வெளியில் சென்று வந்தாலே உடல் மட்டுமன்றி முகமும் கருத்திடும். எனவே சூரியனிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்திருக்கும்.
முகத்தை வெயிலிலிருந்து பாதுகாத்து, மேலும் பளபளவென செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தக்காளியை அரைத்து எடுத்து பெக் போன்று பூசலாம். கற்றாழை 3 தே.கரண்டி, மஞ்சள் 3 தே.கரண்டி மற்றும் தேன் 1 தே.கரண்டி சேர்த்து முகத்தில் வாரத்திற்கு ஒரு முறை பூசி வந்தால் சிறந்த பலனைப் பெறலாம்.
மஞ்சள் 1 தே.கரண்டியைப் பாலில் சேர்த்து பேஸ்ட் போல முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வைத்துக் கழுவ வேண்டும்.
எலுமிச்சையுடன் சர்க்கரை சேர்த்து கருமையான இடத்தில் பூசி வந்தால் நல்லது.
தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்துப் பூசினாலும் கருமை நீங்கும்.
பெக் காய்ந்தவுடன் சுத்தமான தண்ணீரில் தான் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
காலையில் ஏற்படும் வெயிலில் சுற்றித் திரிந்து விட்டு இரவு நேரத்தில் இதைச் செய்து விட்டு உறங்கினால் காலையில் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
