மகிந்தவை பழிவாங்கிய புலம்பெயர் தமிழர்கள்! தென்னிலங்கை அரசியல்வாதியின் ஆதங்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் கொழும்பு விஜேராம வீட்டை விட்டு விரட்டி தண்டனை வழங்கியுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தங்கல்லையில் கால்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், அக்குரஸ்ஸையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பழிவாங்கும் நோக்கம்
அதன்போது, தொடர்ந்து பெசிய அவர், “முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் போர்வையில் மகிந்த ராஜபக்சவை பழிவாங்கியுள்ளனர்.
இந்த நாட்டின் 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை, இந்த அரசாங்கம் சார்ந்திருக்கும் மற்றும் ஆட்சியமைக்க உதவிய பிரிவினைவாத குழு, டயஸ்போராக்களுக்கு பழிவாங்கும் நோக்கமிருந்தது.நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தனர்.
அது நடந்துள்ளதாகவே எமக்கு தோன்றுகிறது.எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பல அரசியல் தலைவர்கள் அநாவசியமாக பொதுச் சொத்துக்களை பயன்படுத்தியதை, அதில் மகிந்த ராஜபக்சவும் அடங்குவார்.இவை நாம் நன்கறிவோம்.
பின்னணியில் உள்ள காரணங்கள்
ஆனால் நாங்கள் நன்கறிந்த மகிந்த சாதாரண மனிதர்.நீண்ட காலம் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.சொத்துக்களுக்காக ஓடியவர் அல்ல.நான் பல்கலைக்கழத்தில் இருந்த நாள் முதல்,அவருடன் நெருங்கி பழகியவன்.
எங்கு போனாலும் கொடுப்பதை சாப்பிட்டு விட்டு கிடைக்கும் வாகனத்தில் சென்று எம்முடன் அரசியலில் ஈடுபட்டவர்.நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான், அனாவசியமான செலவு செய்வதாக சொன்னவர்கள் யாரென்று.இதற்கு பின்னால் பல காரணங்கள் உண்டு என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
