புன்னகையின் பின்னால் மறைந்துள்ள கொடிய மிருகம் - சந்திரிகா
1994 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க (Chandrika Kumaratunga) என்ற 48 வயது பெண் இலங்கை அரசியலில் காட்சிக்கு வந்து போது இலங்கையர்கள் அவரை ஒரு தேவதையாகவே பார்த்தார்கள்.
தமிழ் மக்களும் சந்திரிகாவை ஆரம்பத்தில் ஒரு சமாதான தேவதையாக பார்த்தார்கள். தனது தந்தையையும் கணவரையும் சிங்களத்தின் கடும் போக்காளர்களின் துப்பாக்கிகளுக்கு பலி கொடுத்திருந்த சந்திரிகா தமிழ் மக்களின் வேதனைகளையும் வலிகளையும் நிச்சயம் பிரதிபலிப்பார் என தமிழ் மக்கள் உறுதியாக நம்பியிருந்தனர்.
ஆரம்பத்தில் சந்திரிகாவின் வாயிலிருந்து சமாதானம் என்ற வார்த்தையை தவிர வேறெதுவும் வரவில்லை. தான் ஆட்சிக்கு வந்தால் கொடிய யுத்தத்திற்கு முடிவு கட்டுவதாகவும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவேன் எனவும் விடுதலைப் புலிகளுடன் பேசுவேன் எனவும் திரும்பத் திரும்ப சொன்னார்.
இவ்வாறு பல போலியான வார்த்தைகளை கூறிய சந்திரிகா தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தார். சந்திரிகாவை கொண்டாடினார்கள் தமிழ் மக்கள்.
மிகப்பெரிய பொருளாதார தடைக்கு தமிழர் தாயகம் உட்பட்டிருந்த காலகட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் சிறிலங்காவின் ஆட்சி பீடத்தில் ஏறினார் சந்திரிகா. பின்னர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்ததையில் ஈடுபட்டார்.
தனது சொந்த மாமாவை சிறிலங்காவின் பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமித்து விட்டு சமாதானம் பேசிக்கொண்டிருந்த சமகாலத்தில் இராணுவத் தேர்வுக்கான வியூகங்களையும் வகுத்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து1995 ஆம் ஆண்டு ஏப்ரலில் பெரும் படைபலத்துடன் களத்தில் விடுதலைப் புலிகளை சந்தித்தார்.
சிறிலங்காவின் முப்படைகளின் தளபதியாக சந்திரிகா பதவியேற்று வெறும் 10 மாதங்களில் சந்திரிகா விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காவின் முப்படைகளுக்கும் இடையேயான கடுமையான யுத்தத்தில் பல வரலாற்றுச் சம்பவங்கள் இருக்கின்றன.
அந்த 10 வருட காலப் பகுதியில் சந்திரிகாவின் சிங்களப் படைகள் அப்பாவித் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் தான் புன்னகையுடன் கூடிய சந்திரிகாவின் முகத்தின் பின்னாலிருந்த கொடிய முகத்தை தமிழ் மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டியிருந்தது.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை உண்மைகள் நிகழ்ச்சியில் காண்க......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
