நித்திரையிலிருந்த இளைஞன் கழுத்தறுத்து கொடூர கொலை
தனது வீட்டில் நித்திரையிலிருந்த இளைஞனை இனந்தெரியாத நபர் ஒருவர் புகுந்து கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் 2.20 மணியளவில் களுத்துறை பலதொட்ட வீதி, தேக்கவத்தை பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதி
அனுருத்த தனஞ்சய டி சில்வா எனப்படும் சந்துன் என்று அழைக்கப்படும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 27 வயதுடைய இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கபில பிரேமதாச மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ச ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய, தலைமையக காவல்துறை பரிசோதகர் ருவான் விஜேசிங்க, பிரதான காவல்துறைபரிசோதகர் தினேஷ் சில்வா, பிரதி காவல்துறை பரிசோதகர் உபுல் ஹர்ஷ குமார ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
