எல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய பெலாரஸ் - தக்க பதிலடி கொடுத்த போலந்து (காணொளி)
போலந்து நாட்டின் எல்லைக்கு அருகே அண்டை நாடான பெலாரஸ் தனது மிகப்பெரிய இராணுவ படைகளை குவித்ததில் அங்கு பரபரப்பு நிலை உருவாகிவந்தது.
இதனால் போலந்தில் பதற்றம் அதிகரித்ததுடன் எல்லையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், போலந்து தன்னுடைய ஆயுதப்படை தினமான ஓகஸ்ட் 15ம் திகதி தனது வரலாற்றில் மிகப் பிரம்மாண்டமான இராணுவ அணிவகுப்பு பயிற்சி ஒன்றை நடத்தியுள்ளது.
இராணுவ அணி வகுப்பு

இதில் 200 இராணுவ வாகனங்கள், 92 இராணுவ விமானங்கள், HIMARS லாஞ்சர்கள், K2 டாங்கிகள், பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள், Bayraktar TB2, போர்சுக் போர் ட்ரோன்கள், மற்றும் M1A1 ஆப்ராம்ஸ் போன்றவை இடம்பெற்றுள்ளன.
அத்துடன் இதில் அமெரிக்கா, பிரித்தானியா, குரோஷியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
Russia is trying to scare Poland by placing a couple thousand Wagner troops in Belarus.
— Visegrád 24 (@visegrad24) August 13, 2023
Meanwhile, this is how the streets of Warsaw looked like last night.
The Polish Army would crush any Wagner incursion within a few hours and Lukashenko knows it.
?? pic.twitter.com/H2aRaFWEL9