ஐரோப்பிய எல்லையில் தமிழர் தாயகப் பகுதி இளைஞன் பரிதாப பலி!
Mullaitivu
Belarus
Poland
Europe
Death
By Kalaimathy
ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட தாயகப்பகுதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் சட்டவிரோத பயண முகவரே இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ் – போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத பயணத்தால் உயிரிழப்பு
முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் வயது 33என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இளைஞன் தொடர்பில் உண்மையான தகவல் அறிய முடியாது குடும்பத்தினர் பெரும்சோகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்