இரவில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா..!
சருமப் பராமரிப்புக்கு புகழ்பெற்ற ஒரு பொருளாக இருப்பது கற்றாழை ஆகும்.
கற்றாழையை பொறுத்தவரையில் இயற்கையின் அதிசயமாகப் பார்க்கப்படும் கற்றாழையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
அதிலும் இரவில் முகத்துக்கு கற்றாழையை பூசுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றது.
கற்றாழை
கற்றாழையானது இயற்கையாகவே ஈரப்பதமானது, எனவே இதனை இரவில் சருமத்திற்குப் பயன்படுத்தும்போது இயற்கையான ஈரப்பதம் சருமத்திற்கு கிடைக்கின்றது.
எனவே, வறண்ட அல்லது நீர் இழப்பு சருமம் உள்ளவர்களுக்கு கற்றாழை சிறந்த தேர்வாக அமையும். மென்மையான அல்லது எரிச்சலூட்டும் சருமம் இருந்தால் கற்றாழை ஜெல் சிறந்த தேர்வாக அமையும்.
இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.
நன்மைகள்
வெயிலின் அதிகப்படியான தாக்கம், அதிக முகப்பரு, சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை உள்ளவர்கள் இரவு தூங்குவதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் சிறந்த பலனை அடையலாம்.
வயதாகும்போது சருமம் நெகிழ்ச்சியடைந்து அதன் உறுதித் தன்மையை இழக்கிறது. கற்றாழை ஜெல்லில் இருக்கும் விட்டமின் சி மற்றும் இ போன்றவை வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது.
இரவில் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மெல்லிய கோடுகள் போன்றவை குறையும். முகப்பரு என்பது எல்லா வயதினருக்கும் உள்ள பொதுவான பிரச்சினையாகும்.
இயற்கையான புத்துணர்ச்சி
கற்றாழை ஜெல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவுக்கு எதிராக போராடி சருமத்திற்கு பாதுகாப்பை வழங்குகிறது.
மேலும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதால், எதிர்காலத்தில் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்றவை நமது மனநிலையை பெரிதும் பாதிப்பவை. கற்றாழை ஜெல்லில் தழும்புகளை நீக்கும் என்சைம்கள் உள்ளன.
அவை முகத்தில் வடுக்களை நீக்க உதவுகின்றன. எனவே இரவில் முகத்தில் கற்றாழை ஜெல் தடவுவதால் முகத்திற்கு இயற்கையான புத்துணர்ச்சி கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |