கோடையிலும் முகம் பளபளவென்று இருக்க வேண்டுமா! இந்த பொருட்கள் இருந்தா போதும்..
தற்போது கோடைக்கால வெயில் சுட்டெரிக்கின்றது. அதனால் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருமையடைகின்றது.
எனவே, அனைவருக்கும் இருக்கும் பெரிய கேள்வி " முகத்தை எப்போதும் பொலிவாக வைத்திருப்பது எப்படி..? "
இதனால் அதிகமானோர் முகத்தின் அழகுக்காகவும் நிறத்துக்காகவும் பல்வேறுபட்ட செயற்கை கிரீம்களையும் பல தொழிநுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர்.
முகத்தின் அழகு
ஆனால் இந்த செயற்கை முறைகளால் பிற்காலத்தில் பல தோல் நோய்களும் வேறு பல நோய்களும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
எனவே முகத்தை அழகாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க இயற்கைமுறைகள் தான் மிகச்சிறந்தது.
அந்தவகையில் எவ்வாறு உடல் மற்றும் முகத்தை வெள்ளையாகவும் , பொலிவாகவும் மாற்றலாம் என பார்க்கலாம்.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டருடன் முல்தானி மெட்டி பவுடரை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவ வேண்டும். காபித் தூள் மற்றும் ரோஸ் வோட்டர் சேர்த்து பயன்படுத்தலாம்.
சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.
கடலை மாவை எடுத்து, ரோஸ் வோட்டர் சேர்த்து பயன்படுத்தலாம்.
கற்றாழையுடன் ரோஸ் வோட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
தொடர்ந்து இவ்வாறு செய்து வர சிறந்த பலனை அடையலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |