150 அடி தேர் கவிழ்ந்து விபத்து! இந்திய பிரபல கோயில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு ஆனைக்கல் அருகே பிரபல மதுராம்மா கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு நகர் ஆனேக்கல் தாலுகா ஹுஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுராமா கோவிலில் உள்ளது. இங்கு நடைபெறும் ஆண்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர்.
திடீரென கவிழ்ந்து விபத்து
திருவிழாவின் ஒரு பகுதியாக, கோயிலுக்கு சொந்தமான 120 அடி உயரம் கொண்ட தேரை பொதுமக்கள் நகர் பகுதிகளில் இழுத்துச் சென்றனர். அப்போது தேர் எதிர்பாராத விதமாக திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பொதுமக்கள் ஏராளமாக கூடியிருந்த நிலையில், தேர் கவிழப்போவதை உணர்ந்த அனைவரும் தப்பி ஓடியதால் எந்தவித உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
कर्नाटक: बेंगलुरु के हुस्कुर में मद्दुरम्मा देवी जात्रे उत्सव के दौरान मंदिर का रथ गिरने से श्रद्धालु बाल-बाल बच गए।#Karnataka #Bengaluru #HuskurJatre2024 #accident #MaddurammaDeviTemple #newsindia24x7 pic.twitter.com/PXp5EcztVW
— News India (@newsindia24x7_) April 6, 2024