இஸ்ரேலை விட்டு விலகாத ஆபத்துக்கள்: எந்த நேரமும் வெடித்துச் சிதறக்கூடிய எரிமலையின் உச்சத்தில் இஸ்ரேல்!
இஸ்ரேலைப்(Israel) பொறுத்தவரையில் - தற்பொழுது அது முன்னெடுத்துவருகின்ற யுத்தத்தில் அது பயணிக்கவேண்டிய தூரம் நிறையவே இருக்கின்றது.
இஸ்ரேலைச் சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் இன்னமும் இஸ்ரேலை விட்டு விலகவேயில்லை என்றுதான் கூறவேண்டும்.
காசா மீதான யுத்தம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அந்த முடிவடைய இன்னமும் 7 மாதங்கள்வரை தேவைப்படும் என்று இஸ்ரேல் அண்மையில்தான் அறிவித்தும் இருக்கின்றது.
வடக்கு இஸ்ரேலில் எந்த நிமிடம் வேண்டுமானாலும் பாரிய யுத்தம் ஆரம்பமாகக்கூடிய அபாயம் இருக்கின்றது.
ஹவுத்திகள், ஹட்யாப் ஹிஸ்புல்லாக்கள் போன்ற- இஸ்ரேலை விட்டு கொஞ்சம் தூரமாக இருக்கின்ற ஆயுத அமைப்புக்கள்- இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளுவதான பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்ற காணொளி காட்சிகள் அண்மையில் வெளியாக- இஸ்ரேல் எதிர்கொள்ளுகின்ற தாக்குதலின் பரிணாமத்தை அச்சத்துடன் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
இஸ்ரேலின் மிகப் பெரிய பாதுகாப்பு அரண்களாக நின்றுகொண்டிருக்கின்ற அமெரிக்காவும், மேற்குல நாடுகளும், அடுத்துவருகின்ற நாட்களில் உக்ரேனில் முழுமையாகக் கவனத்தைத் திருப்பிவிடக்கூடிய அளவுக்கு அங்கு காட்சி மாற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
மறுபக்கம் ஈரானோ, தனது அதிபர், முக்கிய தளபதிகள் போன்றவர்களைப் பலிகொடுத்துவிட்டு இஸ்ரேலைத் தாக்குவதற்கு தருணம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றது.
உண்மையைக் கூறப்போனால், எந்த நேரமும் வெடித்துச் சிதறக்கூடிய எரிமலையின் உச்சத்தில் இன்று நின்றுகொண்டிருக்கின்றது இஸ்ரேல்.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேல் நின்றுகொண்டிருக்க, இஸ்ரேல் தற்பொழுது மேற்கொண்டுவருகின்ற யுத்தத்தின் முக்கிய பங்காளியான பென்னி காண்ட்ஸ்(Benny Gantz) பதவி விலகியுள்ள விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |