ஜேர்மனியை உலுக்கிய பிரைட் பேரணி விபத்து...! ஒருவர் பலி பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஜேர்மனியில் கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே (CSD Pride Parade) எல்ஜிபிடிகியூ (LGBTQ+) பேரணியில் வாகனம் ஒன்று புகுந்து விபத்திற்குள்ளகியுள்ளது.
தலைநகர் பெர்லினில் நடைபெற்ற பேரணியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடைபவனி பேரணி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெர்லினில் உள்ள டியர்கார்டன் பூங்கா பகுதிக்கு அருகில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் நடைபவனி பேரணியின் போது வெள்ளை நிற வேன் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் புகுந்துள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காகப் பேரணி உடனடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
தாக்குதலைத் தொடர்ந்து வாகனத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபரை அப்துல் பி (Abdul B.) என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

அத்தோடு, அவர் ஆயுதம் ஏந்தியவர் மற்றும் ஆபத்தானவர் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபரைப் பிடிப்பதற்காக பெர்லின் நகரம் முழுவதிலும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |