உலகின் தலைசிறந்த நாடுகள் எவை தெரியுமா..! வெளிவந்த பட்டியல்
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தையும், கனடா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த பட்டியலின் படி, கடந்த ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்த கனடா, இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பல பிரிவுகளில் சிறந்த இடங்கள்
இதன்படி, வாழத் தலைசிறந்த நாடாகவும், புதிதாக ஒரு தொழில் தொடங்குவதற்கு சிறந்த நாடுகள் என்னும் பிரிவிலும் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கல்விக்கு, கனடாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. வெளிநாட்டவர்கள் கல்வி சிறந்த நாடுகள் பட்டியலில் 7ஆவது இடம் கிடைத்துள்ளது.
பிள்ளைகளை வளர்ப்பதற்கு ஏற்ற நாடுகள் பிரிவில் 7ஆவது இடம் கிடைத்துள்ளது. இன சமத்துவத்துக்கு 2ஆவது இடம் கிடைத்துள்ளது.
பெண்களுக்கு ஏற்ற நாடுகள் பிரிவில் 6ஆவது இடம் கிடைத்துள்ளது. பணி ஓய்வு பெற்றபின் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் என்னும் பிரிவில் 6ஆவது இடம் கிடைத்துள்ளது.
உலகின் தலைசிறந்த நாடு
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, சுவிட்சர்லாந்து.
சுவிட்சர்லாந்தைப் பொறுத்தவரை, தொடர்ந்து இரண்டாவது முறையாக(2022, 2023) அந்நாட்டுக்கு இந்தச் சிறப்பு கிடைத்துள்ளது.