ட்ரம்பின் அழுத்தத்திற்கு மத்தியில் பெரும் மைல்கல்லை எட்டிய சீனா!!
அமெரிக்க ஜனாதிபதியின் பரஸ்பர வரிக் கொள்கைகளினால் சர்வதேச வர்த்தகங்கள் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், சீனா தனது ஏற்றுமதி வருவாயில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 12.4 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், இது ளூம்பெர்க் ஆய்வில் கணிக்கப்பட்ட 4.6 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய சிக்கல்கள்
அத்துடன், இறக்குமதியும் 4.3 சதவீதம் சரிவடைந்துள்ளது என சீன அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளதுடன், சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் கடந்த மாதம் சுமார் ஐந்து சதவீத வருடாந்திர வளர்ச்சி இலக்கை நிர்ணயித்து, உள்நாட்டுத் தேவையை அதன் முக்கிய பொருளாதார உந்துசக்தியாக மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
எனினும், ஆனால் சீனாவின் பலவீனமான மீட்சி ட்ரம்பின் வர்த்தகப் போரிலிருந்து புதிய சிக்கல்களை எதிர்கொள்கிறது, இந்த மாதம் பெரும்பாலான சீனப் பொருட்களுக்கு மிகப்பெரிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் சரிவு
சீன இறக்குமதியை குறிவைத்து உலகளாவிய வரி தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி தொடங்கியதிலிருந்து, இரு நாடுகளும் வரி விதிப்பில் போட்டியிட்டு வருகின்றன. சீனா மீது 145 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா மீது 125 சதவீத வரியை சீனா விதித்துள்ளது.
இந்த நிலையில், ஜனவரி முதல் மார்ச் வரையில் சுமார் 115.6 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்கா தங்களிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
ஆனால் வரி விதிப்புக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டவையே தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் மாதங்களில் ஏற்றுமதி சரிவடையவும் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
