குவியும் பாராட்டுக்கள் - ரோகித் சர்மாவுக்கு தலைவணங்கும் இலங்கை ஜாம்பவான்கள்!
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழட்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதன் படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 373 ஓட்டங்களை எடுத்தது. அதைத்தொடர்ந்து 374 என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 ஆட்டமிழப்புக்கு 306 ஓட்டங்களை எடுத்தது.
இந்த போட்டியில் இலங்கை அணி தலைவர் தசுன் சானக 98 ஓட்டங்களில் பெற்றிருந்த போது முகமது ஷமியால் மன்கட் முறையில் ஆட்டமிழப்பு செய்யப்பட்டார்.
மன்கட் முறை ஆட்டமிழப்பு
The real winner was the sportsmanship of Rohit Sharma for refusing to take the run out. I doff my cap to you ! https://t.co/KhMV5n50Ob
— Sanath Jayasuriya (@Sanath07) January 10, 2023
அதை சோதிப்பதற்காக நடுவரும் 3-வது நடுவரை அணுகினார். அந்த சமயத்தில் வேகமாக ஓடி வந்த இந்திய தலைவர் ரோகித் சர்மா முகமது சமியிடம் கலந்துரையாடி குறித்த ஆட்டமிழப்பை நிராகரிக்க செய்தார்.
அவரது வார்த்தைகளை புரிந்து கொண்ட முகமது ஷமி நடுவரிடம் சென்று தாம் முன்வைத்த ஆட்டமிழப்பு அணுக்களை மீளப்பெற்றார்.
இதனால் அடுத்த 2 பந்துகளில் 4 ஓட்டங்கள் மற்றும் 6 ஓட்டங்களை பெற்று சதத்தை பதிவு செய்தார்.
ஹேட்ஸ் ஆஃப் ரோகித்
Not many captains would do this but hats off to @ImRo45 for withdrawing the appeal even though the law says so! Displaying great sportsmanship ? pic.twitter.com/Dm2U3TAoc9
— Angelo Mathews (@Angelo69Mathews) January 10, 2023
குறித்த மன்கட் ஆட்டமிழப்பு கோரிக்கையை நிராகரிக்க செய்த ரோகித் சர்மாவை இலங்கை ஜாம்பவான் பாராட்டி உள்ளார்.
விளையாட்டு துறையின் உண்மையான வெற்றியாளர் எனவும் அவரின் செயலுக்கு தலை வணங்குகிறேன் எனவும் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
பல தலைவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள். விதிமுறை சொன்னாலும் மேல்முறையீட்டை மீள பெற்றமை சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்துகிறது. ''ஹேட்ஸ் ஆஃப் ரோகித் சர்மா'' என அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
