முடி வளர்ச்சி மும்மடங்கு அதிகரிக்க வேண்டுமா : இதோ நிரந்தரமான ஒரு தீர்வு
Hair Growth
Beauty
By Shalini Balachandran
பொதுவாகவே அனைவருக்கும் நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தல் என்றால் மிகவும் பிடிக்கும் இதற்காக நீங்கள் அதற்கு தேவையான ஊட்டசத்துகளையும் முறையான கவனிப்பையும் வழங்க வேண்டும்.
இந்தநிலையில், உங்களது முடியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் எண்ணெயை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த முடி வளர்ச்சி எண்ணெய் செய்முறையானது உங்கள் முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கும் மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
அடர்த்தியான கூந்தல்
தேவையான பொருட்கள்
- கருஞ்சீரகம் - ½ கப்
- தேங்காய் எண்ணெய் - 1 கப்
செய்முறை
- முதலில் ஒரு கருஞ்சீரக விதைகளைப் நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் இதில் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி நன்கு கலக்கவும்.
- பிறகு இந்த பாட்டிலை சூடான இடத்தில் இரண்டு வாரங்கள் வரை விடவும்.
- அதன் பின், விதைகளை வடிகட்டி, மீண்டும் எண்ணெயை பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம்.
- இந்த எண்ணெயை உச்சந்தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து பின் அலசிக்கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி