செல்வம் செழிக்க மணி பிளான்ட்டை வைக்க வேண்டிய திசை: முக்கிய வாஸ்து ரகசியங்கள்
மணி பிளான்ட் வளர்ப்பது வெறும் அழகுக்காக மட்டுமல்ல அது மன அமைதி, சுத்தமான காற்று மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைத் தரக்கூடியது.
அத்தோடு நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதிலும் மணி பிளான்ட் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்தச் செடியானது நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி சூழலை இலகுவாக்குகிறது.
செடியின் வளர்ச்சி
இந்தத் தாவரத்தின் பச்சை நிறம் நமது கண்களுக்கும் மனத்திற்கும் அமைதியைத் தருகிறது.
இது நம்மைச் சுற்றியுள்ள காற்றைத் தூய்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் கண் சோர்வையும் குறைத்து உற்சாகத்துடன் வேலை செய்ய நம்மை ஊக்குவிக்கிறது.

மணி பிளான்ட் செடி எப்போதும் மேல்நோக்கி வளரும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, செடியின் வளர்ச்சி என்பது நாம் வாழ்க்கையில் அடையும் முன்னேற்றத்தின் அறிகுறியாகும்.
காய்ந்த இலை
இந்தநிலையில் மணி பிளான்ட்டை வீட்டின் தென்கிழக்கு திசையில் (South-East direction) வைப்பது அதிக நன்மைகளையும் செல்வ செழிப்பையும் தரும்.
மணி பிளான்ட் கொடிகள் தரையில் படரக்கூடாது.

மேலும் அதை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பது நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இச்செடியின் இலைகள் காய்ந்துபோகாமல் கவனித்துக்கொள்வது அவசியம்.
காய்ந்த இலைகளை உடனே அகற்றிவிடுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |