உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் : முதலிடம் பிடித்தது எது தெரியுமா..!
உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதலிடத்தை பிடித்தது இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்.
டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் சார்பில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் குறித்த ஆய்வு எடுக்கப்பட்டது.
முதல் பத்து இடங்களை பிடித்த பல்கலைக்கழகங்கள்
115 நாடுகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், தற்போது இதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதன்படி, இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், அமெரிக்காவை சேர்ந்த எம்.ஐ.டி பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் 200 ற்குள் இடம்பிடித்த சிறந்த பல்கலைக்கழகங்கள்
ஹோவாட் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஆறாவது இடத்தில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |