நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு பரிதாபகரமாக உயிரிழப்பு!
Sri Lanka Police
Puttalam
Death
By Laksi
தப்போவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (18) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஓய சங்கானந்த தேரர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,புத்தளம் வன்னாத்தவில்லு ஸ்ரீ தர்மராஜ விகாரைக்கு வருகை தந்த குறித்த இளம் பிக்கு, அங்கிருந்து பிக்குகள் குழுவுடன் தப்போவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றபோதே இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது,உயிரிழந்த இளம் பிக்குவின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை (19) நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ காவல்தறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி