தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய மிதிவண்டிப் பயணம் தொடர்கிறது....
justice
tamil people
bicycle ride
By Vanan
இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர் தாயகத்துக்கு நிரந்தர பாதுகாப்புக் கோரியும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் மிதிவண்டிப்பயணம் நேற்றுடன் பத்தாவது நாளை கடந்துள்ளது.
லக்ஸம்பேர்க் - ஜேர்மனி எல்லையில் இருந்து ஆரம்பித்த நேற்றைய பயணத்தில் சார்புறூக்கன் மாநகரசபை முதல்வருடனான சந்திப்பு இடம்பெற்றது.
அதன் பின்னர் பிரான்சுக்குள் நுழைந்த பயணக்குழு அங்கு சார்குமின் மாநகரசபையிலும் முதல்வரோடும் ஊடகங்களோடும் கலந்துரையாடியிருந்தது.
கடந்த 16 ஆம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பித்த இந்த அறவழிப் போராட்டம், ஏற்கனவே நெதர்லாந்து , பெல்சியம், லக்சமபேர்க், ஜேர்மனி ஆகிய நாடுகளை தாண்டி பயணித்துவருவது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்