பைடனின் உத்தரவால் சிக்கலில் சீனா?
கொரோனா தொற்று பரவலின் தோற்றுவாய் குறித்த விசாரணைகள் அரசியல் மயப்படுத்தப்படும் பட்சத்தில் அது கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சிகளை பாதிக்கும் என சீனா தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றானது எவ்வாறு எங்கு தோற்றம் பெற்றது என்பது குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கையிடுமாறு அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் இதனைக் கூறியுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றின் தோற்றுவாய் குறித்து உலக சுகாதார ஸ்தாபனமும் தனது இரண்டாம் கட்ட ஆய்வுகளை ஆரம்பிப்பதற்கு தயாராகியுள்ளது.
இந்த நிலையில் சீனாவின் ஆய்வுகூடத்தில் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விசாரணையாளர்களுக்கு மேலதிக அணுகலை உறுதிப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு சீனா உள்ளாகியுள்ளது.