அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பைடன் என்ன செய்கிறார் தெரியுமா...!
அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜோ பைடன் (joe biden)தனது சமூக சேவை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறுவனத்துடன் அவர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பைடனின் பல படைப்புகளை வெளியிட்ட நிறுவனம்
ஜோ பைடன் முன்பு 2017 முதல் 2020 வரை அந்த நிறுவனத்தில் பணியாற்றினார், மேலும் அந்த நேரத்தில் அந்த நிறுவனம் அவரது பல படைப்புகளை வெளியிட்டது.
🚨Former President Joe Biden has signed with CAA.
— Olia (@OliaOnX) February 3, 2025
This is not @TheBabylonBee. He actually signed with CAA. pic.twitter.com/TUU9WICtlP
சமூக சேவை மற்றும் திறமை அங்கீகார அமைப்பாக செயல்படும் இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நபர்களில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாbarack obama), அவரது மனைவி மிஷேல் ஒபாமா மற்றும் பல செனட்டர்கள் அடங்குவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக, திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் இசை போன்ற துறைகளில் உலகப் புகழ்பெற்ற பல ஆளுமைகள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாகப் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |