பைடனின் வரலாற்று முடிவு - உக்ரைன் அதிபர் பாராட்டு
Joe Biden
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
By Sumithiran
உக்ரைன் விமானிகளுக்கு F-16 போர் விமானங்கள் மற்றும் அதன் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எடுத்த முடிவை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.
உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் அதிபர் ஜோ பைடனின் முடிவால் உக்ரைன் விமானப்படையின் பலம் அதிகரிக்கும் என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
விரிவான கலந்துரையாடல்
ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் அதிபர் பைடனை சந்தித்து விமானிகளின் பயிற்சி குறித்து மேலும் கலந்துரையாட உள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
வரலாற்று முடிவு
அதிபர் பைடனின் இந்த முடிவு ஒரு வரலாற்று முடிவு என்றும், இந்த முடிவை நடைமுறையில் செயல்படுத்துவது குறித்து ஹிரோஷிமாவில் அதிபர் பைடனுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி