தகுந்த பதிலடி கொடுக்கப்படும் :ஈரானுக்கு பைடன் கடும் எச்சரிக்கை
சிரிய ஜோர்டான் எல்லையில் அமைந்துள்ள அமெரிக்க படைமுகாம் மீதான தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் ஆதரிக்கும் குழுக்களின் தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அதிபர் பைடன் கூறினார்.
ஈரான் பொறுப்பேற்கவேண்டும்
"இதைச் செய்தவர்களுக்கு அவர்கள் ஆயுதங்களை வழங்குகிறார்கள் என்ற அர்த்தத்தில் நான் அவர்களை [ஈரான்] பொறுப்பேற்குமாறு கூறுகிறேன்" என்று பைடன் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்க தளம் மீதான ட்ரோன் தாக்குதலில்
சிரிய,ஜோர்டான் எல்லையில் உள்ள அமெரிக்க தளம் மீதான ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 40 ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
அத்துடன் இந்த தாக்குதலுக்கு ஈரானின் ஆதரவு பெற்ற குழு ஒன்று உரிமை கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |