உக்ரைனுக்கு முட்டுக்கட்டையாக மாறிய அமெரிக்கா
Joe Biden
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
By Beulah
லிதுவேனியாவில் ஜீலை நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) நேட்டோ மாநாடு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் போருக்கு நடுவே உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கூட்டமைப்பின் கோட்பாட்டின் படி தற்போது உக்ரைனை இணைத்தால் அதனை பாதுகாக்க அமெரிக்கா உட்பட அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவுடன் சண்டையிட நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுத உதவிகள்

அதேசமயம், உக்ரைனை உடனடியாக நேட்டோவில் இணைக்க முடியாது என்ற போதும் தொடர்ந்து ஆயுத உதவிகள் வழங்கப்படும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி லிதுவேனியா நேட்டோ மாநாட்டில் உக்ரைனை இணைப்பது தொடர்பில் நல்ல முடிவு எட்டப்படும் என கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 53 நிமிடங்கள் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி