நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு
பிக்பொஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகை மீரா மிதுனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில், மீரா மிதுனை (Meera Mitun) ஓகஸ்ட் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நிலையில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை
2021-ஆம் ஆண்டு, நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியதாகப் புகார் எழுந்தது.
இந்தப் பேச்சு, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மீரா மிதுன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் முறைப்பாடு அளித்தன.
இந்த வழக்கு நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை மீரா மிதுன் முன்னிலை ஆகாததால் நீதிபதி அவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா
