பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன் - வெளியான விசாரணை அறிக்கை
பிரித்தானியாவில் (UK) தனது இரு மருமகள்களை காப்பாற்றுவதற்காக நீர்வீழ்ச்சியில் குதித்த மோகனநீதன் முருகானந்தராஜா உயிரிழந்துள்ளதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த மரணத்தை விபத்தாக அறிவித்து அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவத்தில் 27 வயதான மோகன் என்றழைக்கப்படும் மோகனநீதன் முருகானந்தராஜா உயிரிழந்துள்ளார்.
காப்பாற்ற தண்ணீருக்குள் இறங்கி
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஸ்வான்சி நகரைச் சேர்ந்த மோகன், 2023ஆம் ஆண்டு செப்டம்பரில், பிரெகான் பீக்கன்ஸ் என்றும் அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள ஸ்க்வட் ஒய் பன்வர் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட்டச் சென்றிருந்தனர்.
அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள அருவியில் விளையாடிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அவரது சகோதரியின மகள்கள் இருவர் தண்ணீரில் தத்தளித்த நிலையில் அவர்களைக் காப்பாற்ற தண்ணீருக்குள் இறங்கியுள்ளார்.
இருவரையும் பாதுகாப்பாக மீட்ட மோகன் இறுதியில் நீரில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் மறுநாள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மோகன் ஒரு விமானி
இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, மோகனநீதன் தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக சவுத் வேல்ஸ் மத்திய பகுதி மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்த மோகன் ஒரு விமானி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரால் காப்பாற்றப்பட்ட இரு குழந்தைகளும் அவரின் மருமகள்கள் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
