புதுமணத் தம்பதிகளுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி
இலங்கையில் (Srilanka) புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்குபற்றி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புதிய வீடு கட்ட கடன்கள்
திருமணத்திற்குப் பின்னர் தங்கள் சொந்த வீட்டில் வாழ விரும்பும் இளம் தலைமுறையினரின் கனவை இந்த திட்டம் நிறைவேற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள வீட்டு வசதி பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அரசு ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட அல்லது வீடுகளைப் புதுப்பிக்க நிதிக் கடன்கள் வழங்கப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் 140 பேருக்கு உதவி வழங்கி வருவதாகவும், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் நிதிக் கடன்கள் கிடைக்கும் என்றும், 80க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு ரூ. 01 மில்லியன் கடன்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
