மாறப்போகும் தேசபந்துவின் தலைவிதி - ஆரம்பமான விவாதம்
புதிய இணைப்பு
முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மாஅதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் இன்று (08.05.2025) செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்குக் கூடுகின்றது.
ஆரம்ப கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மேற்படி தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்தப்படும்.
ஆதரவாக வாக்களிக்கவுள்ளன
அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும். மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிராக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பனவும் ஆதரவாக வாக்களிக்கவுள்ளன என்று தெரியவருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
