செம்மணியில் அலறும் ஆன்மாக்கள்: மறுக்கப்படும் நீதி - தேடும் தரையை ஊடுருவும் ராடர்

Sri Lanka Police Jaffna Anura Kumara Dissanayaka NPP Government chemmani mass graves jaffna
By Thulsi Aug 04, 2025 10:39 PM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை, புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 06 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 61 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

செம்மணி மர்மத்தை உடைக்க தயாராகும் சோமரத்ன - அச்சத்தில் அலறும் சரத் வீரசேகர

செம்மணி மர்மத்தை உடைக்க தயாராகும் சோமரத்ன - அச்சத்தில் அலறும் சரத் வீரசேகர

எலும்பு கூட்டு தொகுதிகள்

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 30 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

செம்மணியில் அலறும் ஆன்மாக்கள்: மறுக்கப்படும் நீதி - தேடும் தரையை ஊடுருவும் ராடர் | Jaffna Chemmani Mass Grave Excavation

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் வரையில் 61 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 39 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் ஆரம்பமானது ஸ்கேன் பரிசோதனை!

செம்மணியில் ஆரம்பமானது ஸ்கேன் பரிசோதனை!

ஸ்கான் நடவடிக்கை

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 06 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 126 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 135 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணியில் அலறும் ஆன்மாக்கள்: மறுக்கப்படும் நீதி - தேடும் தரையை ஊடுருவும் ராடர் | Jaffna Chemmani Mass Grave Excavation

அதேவேளை இன்றைய திங்கட்கிழமை செம்மணியில் தற்போதுள்ள 2 மனித புதைகுழிகளை விட அயலில் மேலும் மனித புதைகுழிகள் உள்ளனவா என்பதனை ஆராயும் நோக்கில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஸ்கான் நடவடிக்கை நாளைய தினம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளதுடன், ஸ்கான் நடவடிக்கை குறித்தான அறிக்கை யாழ் . நீதவான் நீதிமன்றில் பரப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அத்துடன் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காணும் வகையில் அவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதைகுழியிலிருந்து வரும் கைக்குழந்தைகள் - பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு

புதைகுழியிலிருந்து வரும் கைக்குழந்தைகள் - பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024