செம்மணி மர்மத்தை உடைக்க தயாராகும் சோமரத்ன - அச்சத்தில் அலறும் சரத் வீரசேகர
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ விடயம் குறித்து ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியான எஸ்.சி விஜேவிக்கிரம ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியான எஸ்.சி விஜேவிக்கிரம ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்றத்தால் குற்றவாளி
கிருஷாந்தி படுகொலை வழக்கில் சோமரத்ன ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் குற்றம் புரிந்திருப்பார்களாயின் அவர்களுக்கு உள்ளக நீதிகட்டமைப்பின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
முறையான விசாரணைகளின் பிரகாரமே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவ்விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கல் நிலையை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தை சர்வதேச விசாரணைக்கு கொண்டு சென்று சாட்சியமளிக்க சோமரத்ன ராஜபக்ஷ தயாராகவுள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணை
சர்வதேச விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் உள்ளக நீதி கட்டமைப்பின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.
சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை - திருவிழா
